உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மது பாட்டில் நிரம்பும் மண்ணரை வாய்க்கால்

மது பாட்டில் நிரம்பும் மண்ணரை வாய்க்கால்

திருப்பூர்; திருப்பூர், ஊத்துக்குளி ரோட்டில், மண்ணரை பகுதியில் மூளிக்குளம் அமைந்துள்ளது. நொய்யல் ஆற்றின் மூலம் இக்குளத்துக்கு நீர் ஆதாரம் கிடைக்கிறது. நொய்யலில், அணைக்காடு பகுதியில் உள்ள அணைக்கட்டிலிருந்து, வாய்க்கால் மூலம் எம்.ஜிஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து இந்த குளத்துக்கு தண்ணீர் செல்கிறது.இதற்காக பொதுப் பணித்துறை அமைத்துள்ள வாய்க்கால் வழியாக மூளிக்குளத்துக்கு தண்ணீர் வருகிறது. வாய்க்கால் கடந்து செல்லும் பகுதி பெரும்பாலும் மறைவான, அதிகளவிலான மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாக உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு சில கும்பல் மறைவான பகுதிகளில் வாய்க்கால் ஓரங்களில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அதன்பின், காலி மதுபாட்டில், வாட்டர் பாட்டில் குளிர்பான பாட்டில்களையும், உணவு மீதங்களையும் வாய்க்காலினுள் வீசிச் சென்று விடுகின்றனர். சிலர் பாட்டில்கள் துாக்கி வீசி உடைத்து எறிந்து விடுகின்றனர்.வாய்க்காலில் தண்ணீர் செல்லும் போது இது போன்ற வீசியெறியப்படும் பாட்டில்கள் தண்ணீர் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தும் நிலை உள்ளது. எனவே, இதுபோல், வாய்க்கால் ஓரம் அமர்ந்து, மது அருந்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ