உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வட்டமலைக்கு அமராவதி உபரிநீர் திட்டம்

வட்டமலைக்கு அமராவதி உபரிநீர் திட்டம்

திருப்பூர்; 'அமராவதியிலிருந்து வெளியேறும் உபரிநீரை, வட்டமலை கரை ஓடை நீர் தேக்கத்துக்கு திருப்பும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது; இதற்கு விரைந்து செயல்வடிவம் கொடுக்கப்படும்' என, அமைச்சர் சாமிநாதன் கூறினார்.காங்கயம் தாலுகா, வெள்ளகோவில் அருகே உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை நீர் தேக்கம் அமைந்துள்ளது. வெள்ளகோவில், லக்கமநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், முளையாம்பூண்டி, புதுப்பை பகுதிகளில், 6,043 ஏக்கர் நிலங்கள், இந்த நீர் தேக்கத்தை சார்ந்து பாசனம் பெறுகின்றன. பாசனத்துக்காகவும், கால்நடைகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், நீர் தேக்கத்தின் வலது மற்றும் இடது பிரதான கால்வாய் வழியாக, 55.30 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டது.

பாசன நீர் திறப்பு

அமைச்சர் சாமிநாதன், அணையில் நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டார். ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலை வகித்தார். தாராபுரம் ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா, திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் பத்மநாபன், வெள்ளகோவில் நகராட்சி தலைவர் கனியரசி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

6,043 ஏக்கருக்கு பயன்

அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: பாசன பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும்வகையிலும், பொதுமக்கள், கால்நடைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காகவும், வட்டமலைக்கரை ஓடை நீர்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வலது மற்றும் இடது பிரதான கால்வாய் வழியாக, 40 மில்லியன்கன அடி வீதம், 80 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் (நேற்று) வரும் மார்ச் 6 வரை, சீரான இடைவெளியில், எட்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன்மூலம், 6,043 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பல்வேறு வகை பயிர்கள் பாசனம் பெறும். இவ்வாறு, அமைச்சர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி