உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொப்பரை வரத்து அதிகரிப்பு ஏலத்தில் விலையும் உயர்வு

கொப்பரை வரத்து அதிகரிப்பு ஏலத்தில் விலையும் உயர்வு

உடுமலை:உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வியாழன் தோறும், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்திற்கு, உடுமலை, பணத்தம்பட்டி, குறிஞ்சேரி, புக்குளம், விளாமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 17 விவசாயிகள், 92 மூட்டை அளவுள்ள, 4,600 கிலோ கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், நடந்த மறைமுக ஏலத்தில், 10 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர். முதல் தரம், ரூ.101 முதல், ரூ. 103.25 வரையும், இரண்டாம் தரம், ரூ. 78.88 முதல், 94.11 வரையும் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, ஏலம் இறுதி செய்யப்பட்டது. ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இ - நாம் திட்டத்தின் கீழ் நடக்கும் ஏலத்தில், கொப்பரை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை காட்டிலும், நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்தில், அதிகளவு விவசாயிகள் கொப்பரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த நிலையில், வியாபாரிகளும் அதிகளவு பங்கேற்றனர்.இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, கொள்முதல் செய்யப்படும் தொகை உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி