அவிநாசி ஒன்றிய சேர்மன் மாரடைப்பால் காலமானார்
அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், தனது அலுவலகத்தில் அதிகாரிகளுடன் பேசி கொண்டிருந்த போது மாரடைப்பால் காலமானார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், 60. அ.தி.மு.க.,வை சேர்ந்த அவர் , ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தனது அறையில், பி.டி.ஓ., விஜயகுமார் உள்ளிட்ட அலுவலர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை அவிநாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஜெகதீசனை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது உடலுக்கு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், அ.தி.மு.க., நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அக்கட்சியின் பொது செயலாளர் பழனிசாமி, ஜெகதீசன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.