உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தையுடன் இருக்கும்போது மொபைல்போன் - டிவி தவிர்ப்போம்

குழந்தையுடன் இருக்கும்போது மொபைல்போன் - டிவி தவிர்ப்போம்

திருப்பூர், பிச்சம்பாளையத்தில் வசிப்பவர்கள் மணிகண்டன் - நந்தினி தம்பதியர்.நந்தினி கூறியதாவது: நான் தங்க நகை கடையில் விற்பனை பிரிவில் பணியாற்றி வருகிறேன்.எனக்கு இரண்டு பெண் குழந்தைகள்; பள்ளியில் படித்து வருகின்றனர்.கணவர் மணிகண்டன் கேட்டரிங் துறையில் பணியாற்றி வருகிறார். குடும்ப சூழ்நிலை காரணமாகவும், பொருளாதாரத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வதற்காகவும் இருவரும் வேலைக்கு சென்று வருகிறோம். இரு குழந்தைகளின் உயர் கல்வி - திருமணம் உள்ளிட்டவற்றுக்காக, இருவரும் வேலைக்கு செல்வது அவசியம் ஆகிறது.எனது தாய் என்னோடு வீட்டில் இருப்பதால் குழந்தைகளை அவர் கவனித்து வருகிறார். இருந்தாலும் எனது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லை என்பது எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. விடுமுறை தினங்களில் முழுவதும் குழந்தைகளுடன் மட்டுமே செலவழிப்பேன். அந்த நாட்களில் இருவரும் மொபைல்போன், 'டிவி' உள்ளிட்டவற்றை தவிர்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ