உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏ.வி.பி., கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணி முகாம்

ஏ.வி.பி., கல்லுாரி சார்பில் நாட்டு நலப்பணி முகாம்

திருப்பூர்: ஏ.வி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு 1 சார்பில் சிறப்பு முகாம் கணக்கம்பாளையம் கிராமத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் கதிரேசன் வரவேற்றார். தாளாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். ஊராட்சி முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம் சிற்பபுரையாற்றினார். பல்வேறு களப்பணிகள், விழிப்புணர்வு, இலவச கண் மருத்துவ முகாம், விதை பந்து தயாரிப்பு உள்ளிட்டவற்றை நாடு நலத்திட்ட மாணவியர் மேற்கொண்டனர். திட்ட அலுவலர்கள் மகேஸ்வரி, தீபிகா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.---சிவா நிகேதன் பள்ளியில்விளையாட்டு விழாதிருப்பூர், பிப். 23-சிவா நிகேதன் பள்ளியில் விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் அணிவகுப்புடன் விழா துவங்கியது. வெகுஜனப்பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள், பெற்றோர்களுக்கு பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. பள்ளி இயக்குனர்கள் அமிர்தா பிரபாகரன், கிருபா ெஷட்டி உரையாற்றினர். வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.திருப்பூர், பிப். 23-சிவா நிகேதன் பள்ளியில் விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் அணிவகுப்புடன் விழா துவங்கியது. வெகுஜனப்பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள், பெற்றோர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. பள்ளி இயக்குனர்கள் அமிர்தா பிரபாகரன், கிருபா ெஷட்டி பேசினர். வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை