உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா

உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளையின் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் நடந்த விருது வழங்கும் விழாவில், கல்லுாரி முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை இணைச்செயலாளர் ராஜமாணிக்கம் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.கல்லுாரி முன்னாள் மாணவரும், அரசு பள்ளி ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சின்னதுரை பங்கேற்று மாணவர்களின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார்.தொடர்ந்து இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவில், துறை வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 24 மாணவர்களுக்கு ரொக்கப்பரிசாக தலா மூவாயிரம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.கடந்தாண்டு பல்கலை., அளவில் சிறப்பிடம் பெற்ற, 15 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வணிகவியல் பாடத்தில், முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சபரீஸ்வரிக்கு, கூடுதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை தலைவர் ஆடிட்டர் கண்ணன், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். வக்கீல் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை