உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாகுபடிக்கு தரமான விதை தேவை; பீட்ரூட் விவசாயிகள் வலியுறுத்தல்

சாகுபடிக்கு தரமான விதை தேவை; பீட்ரூட் விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை; பீட்ரூட் சாகுபடிக்கு தேவையான விதைகளை, தோட்டக்கலைத்துறை வாயிலாக நேரடியாக விவசாயிகளுக்கு வினியோகிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் களிமண் விளைநிலங்களில் கிணற்று பாசனத்துக்கு, பீட்ரூட் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.கணபதிபாளையம், ராகல்பாவி, விருகல்பட்டி, தீபாலபட்டி, மொடக்குபட்டி, கொங்கல்நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட இடைவெளியில் இச்சாகுபடியை மேற்கொள்கின்றனர்.கடந்த சில ஆண்டுகளாக பீட்ரூட் சாகுபடியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில், தரமில்லாத விதையால், விளைச்சல் முற்றிலுமாக குறைந்து விடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.ஏக்கருக்கு சராசரியாக, 14 டன் வரை கிடைத்து வந்த விளைச்சல், ஆறு டன்னாக குறைந்துள்ளது.விவசாயிகள் கூறியதாவது: பீட்ரூட் சாகுபடிக்கு விதைத்தேர்வு செய்வதில், குழப்பம் ஏற்படுகிறது. விதை நடவு செய்தபின், முளைக்காத இடங்களில் மீண்டும் விதை நடப்படும். பல முறை தவறிய பயிர் நடவு மேற்கொள்ள வேண்டியுள்ளது.வேளாண் பல்கலை., யின், விதைகளை பெற்று தோட்டக்கலைத்துறை வாயிலாக நேரடியாக வினியோகம் செய்யலாம். சாகுபடியில் சொட்டு நீர் பாசனம் உட்பட புதிய முறைகளை செயல்படுத்தி வருகிறோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ