உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

திருப்பூர்;திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கருத்தாளர் இந்துமதி மேற்பார்வையில், குழு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. குழு ஒருங்கிணைப்பாளராக ராமகிருஷ்ணன், தலைவர் ஈஸ்வரி, துணை தலைவர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றனர்.

மாநகராட்சி பள்ளி

திருப்பூர் மாநகராட்சி 49வது வார்டு, செரங்காடு, சந்திராபுரம் மாநகராட்சி பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மேயர் தினேஷ்குமார் பங்கேற்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.பாப்பநாயக்கன்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, பள்ளி மேலாண்மைக்குழு மேற்பார்வையாளராக ராஜேஸ்வரி, தலைமையாசிரியை மலர்விழி, 18வது வார்டு கவுன்சிலர் தாமோதரன், குழு தலைவராக ஆனந்தி, ஆசிரியர் பிரநிதியாக ரூபி ஸ்டெல்லா, முன்னாள் மாணவர் தாமரைக்கண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை