மேலும் செய்திகள்
ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ்அணிந்து ஆர்ப்பாட்டம்
19-Feb-2025
திருப்பூர் : சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தலைவர் பாஸ்கரன் துவக்கிவைத்தார். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நவீன், கோரிக்கைகளை விளக்கி பேசினார். சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர் பங்கேற்று, தி.மு.க., தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய அமைத்த அலுவலர்கள் குழுவை திரும்பப்பெற வேண்டும்.ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம் மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுபோலவே தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பிற மாநிலங்களில் சி.பி.எஸ்., திட்ட ஊழியர்களுக்கு வழங்குவதுபோல், தமிழகத்திலும் பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
19-Feb-2025