உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூச்சு திணறி குழந்தை பலி

மூச்சு திணறி குழந்தை பலி

திருப்பூர், : தாராபுரத்தை சேர்ந்தவர் கலையரசன்; டூவீலர் ஷோரூம் மேலாளர். இவரது மனைவி ஓவியா, தாராபுரம் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர். கடந்த, 6ம் தேதி ஓவியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் வெள்ளகோவிலில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்தனர். நேற்று காலை ஓவியா குழந்தைக்கு பால் கொடுக்கும் போது, புரையேறியது. குழந்தையை துாங்க வைத்து விட்டு, பின்னர் பார்த்த போது, மூச்சு திணறி குழந்தை இறந்தது தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை