உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சின்னாறு - மறையூர் ரோடு பணி மாற்று வழித்தடம் இன்றி சிக்கல்

சின்னாறு - மறையூர் ரோடு பணி மாற்று வழித்தடம் இன்றி சிக்கல்

உடுமலை: உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் ரோடு, இரு மாநிலங்களை இணைக்கும் பிரதான போக்குவரத்து வழித்தடமாக உள்ளது. இரு மாநில அரசு பஸ்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றன.இந்த ரோடு முழுவதும் வனப்பகுதியாக அமைந்துள்ள நிலையில், முறையான பராமரிப்பு இல்லாமல், குண்டும், குழியுமாக காணப்படுகிறது.இந்நிலையில், கேரளா அரசு பொதுப்பணித்துறை சார்பில், சின்னாறு முதல் மறையூர் வரை, 16 கி.மீ., துாரம் ரோடு புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ள நிலையில், பகல் முழுவதும் போக்குவரத்து துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறுகையில், 'பணிகள் துவங்கும் போது, காலை, 10:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும்; அதற்கு முன், முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்,' என்றனர்.இதே போல், தமிழக பகுதியில், ஒன்பதாறு செக்போஸ்ட் முதல், சின்னாறு வரை ரோடு மிகவும் மோசமாக மாறியுள்ளதால், தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறையும் ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை