மேலும் செய்திகள்
ஓராண்டாகியும் பயன்பாட்டிற்கு வராத வகுப்பறை
25-Aug-2024
அனுப்பர்பாளையம்;திருப்பூர் அடுத்த வாவிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் படித்து வருகின்றனர்.பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப போதிய வகுப்பறை இல்லை. நெருக்கடியில் அவதிப்பட்டு வருகின்றனர்.கூடுதல் வகுப்பறை கட்ட அரசுக்கு மாணவ பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் பள்ளியின் முன்னாள் மாணவர் வாவிபாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் மூன்றில் ஒரு பங்கு தொகையான எட்டு லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அதற்கான காசோலையை அவர் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலரிடம் வழங்கினார்.
25-Aug-2024