உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 30 யூனிட் ரத்தம் சேகரிப்பு

30 யூனிட் ரத்தம் சேகரிப்பு

அனுப்பர்பாளையம் : 'முயற்சி' மக்கள் அமைப்பு, சென்ட்ரல் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் காந்தி நகர் லயன்ஸ் கிளப் பார்மசி வளாகத்தில் நடந்தது. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டாக்டர் கலையரசி தலைமையில் மருத்துவ குழுவினர் 30 யூனிட் ரத்தம் சேகரித்தனர்.ரத்த தானம் செய்த ரத்தக் கொடையாளர்கள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் விபத்து காப்பீடு பாலிசி வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப் தலைவர் சண்முகம், 'முயற்சி' அமைப்பினர் தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர்சுப்ரமணியம், செயலாளர் விஜயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி