மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
26-Feb-2025
திருப்பூர்; மகளிர் தின விழாவை முன்னிட்டு நேற்று திருப்பூர் குமரன் கல்லுாரியில், மலபார் கோல்ட் நிறுவனம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடந்தது. தொடர்ந்து மிளிரும் ரோட்டரி நட்சத்திர விருது வழங்கும் விழா நடந்தது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் கோமதி வரவேற்றார். கல்லுாரி தலைவர் அர்த்தநாரீஸ்வரன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வசந்தி, மகளிர் மேம்பாடு - ரோட்டரி மாவட்ட தலைவர் பாத்திமா பேகம் முன்னிலை வகித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, ரோட்டரி விருது ஆகியன வழங்கப்பட்டன.'சைபர்' குற்றம் குறித்த விழிப்புணர்வு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் நிர்மலாதேவி நன்றி கூறினார்.
26-Feb-2025