உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிறார் திரைப்பட போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு

சிறார் திரைப்பட போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு

உடுமலை,; மாவட்ட அளவிலான சிறார் திரைப்பட போட்டியில், உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.அரசு பள்ளிகளில், மாணவர்களின் திரைப்படம் சார்ந்த திறன்களை வெளிப்படுத்துவதற்கு சிறார் திரைப்பட போட்டிகள் நடத்தப்பட்டன.மாவட்ட அளவிலான சிறார் திரைப்பட போட்டி, திருப்பூர் ஜெய்வாபாய் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இப்போட்டியில், வட்டார அளவில் வென்ற மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் உடுமலை வட்டாரத்தை சேர்ந்த பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் ஒளிப்பதிவு மற்றும் கதை, வசனம் உள்ளிட்ட இரு பிரிவுகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றனர். இவர்கள் மற்றும் திரைப்பட மன்ற பொறுப்பாசிரியர் ராஜேந்திரன் உள்ளிட்டோருக்கு தலைமையாசிரியர் விஜயா, மற்ற ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை