உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சி அலுவலக அலுவலர்கள் உற்சாகம்

மாநகராட்சி அலுவலக அலுவலர்கள் உற்சாகம்

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று பல்வேறு இடங்களிலும், பல்வேறு அமைப்புகள் சார்பில் மகளிர் தின விழா நிகழ்ச்சிகள் நடந்தது.திருப்பூர் மாநகராட்சி சார்பில் மகளிர் தின விழா நேற்று தெற்கு ரோட்டரி ஹாலில் நடந்தது. இதில், மாநகராட்சியில் பணியாற்றும் பெண் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் துாய்மைப் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.நிகழ்ச்சிக்கு, மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், உதவி கமிஷனர் முருகேசன், கவுன்சிலர் திவாகரன், உதவி திட்ட அலுவலர் சவுதாமினி முன்னிலை வகித்தனர். மகளிர் தின கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள், குடும்பங்களைப் பராமரிக்கும் இல்லத்தரசிகள் ஆகியோரின் நலன், சேவை மனப்பான்மை, கடுமையான உழைப்பு, பாதுகாப்பு ஆகியன குறித்தும் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை