உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அலகு குத்தி சுவாமி ரதம் இழுத்துவந்த பக்தர்கள்

அலகு குத்தி சுவாமி ரதம் இழுத்துவந்த பக்தர்கள்

அவிநாசி;அவிநாசி, காந்திபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை, அம்மன் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் விழாவில், நேற்று பத்துக்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர்கள் சமூக வீர மக்கள் அலகு குத்தி சுவாமி ரதத்தை ஊர்வலமாக இழுத்து வந்தனர்.இன்று, மஞ்சள் நீராட்டு விழாவுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது.முன்னதாக,நேற்று காலை நுாற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெண்கள் ஆகியோர் காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக நான்கு ரத வீதிகளிலும் வந்தனர்.தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை