உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வரைவு வழிகாட்டி பதிவேடு

வரைவு வழிகாட்டி பதிவேடு

சந்தை வழிகாட்டி மதிப்பை சீரமைப்பது தொடர்பாக, இந்திய முத்திரை சட்டம் பிரிவு '47ஏஏ'ன் படி, தமிழ்நாடு முத்திரை வழிகாட்டி மதிப்பு தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்., 26ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டின்படி, மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக, வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பார்வையிட வசதியாக, தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை அறிய, www.tnreginet.gov.inஎன்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.ஆட்சேபனை அல்லது கருத்து இருந்தால், 15 நாட்களுக்குள், கலெக்டர் தலைமையிலான, மதிப்பீட்டு துணை குழுவில் தெரிவிக்கலாம். கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்தோ, தபால் மூலமாகவோ தங்களது ஆட்சேபனையை தெரிவிக்கலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை