மேலும் செய்திகள்
மாணவர்கள் மனித சங்கிலி
27-Aug-2024
திருப்பூர்:திருப்பூர், பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சிக்கண்ணா கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு - -2, ரோட்டரி அவிநாசி ஆகியன சார்பில், போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் குணசேகரன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் தண்டபாணி, பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சிக்கண்ணா கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலகு - 2ன், ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பங்கேற்றார்.மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, மாணவி வர்ஷினி ஆகியோர் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. 'போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு,' எனும் தலைப்பில் மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
27-Aug-2024