உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிபோதையில் கார் ஓட்டி விபத்து அரசு மருத்துவர் என அட்ராசிட்டி

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து அரசு மருத்துவர் என அட்ராசிட்டி

பல்லடம்,: பல்லடம் அருகே, குடிபோதையில், கார் விபத்து ஏற்படுத்தி விட்டு, அரசு தலைமை மருத்துவர் எனக் கூறி, ரகளையில் ஈடுபட்ட ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று முன்தினம் இரவு, பல்லடம் -- திருப்பூர் ரோட்டில், நொச்சிபாளையம் நோக்கி வேகமாக வந்த கார், நிலை தடுமாறி, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது. விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிய டிரைவர் மற்றும் உடன் இருந்த இருவரும் மது போதையில் இருந்தனர். டிரைவர் அதே இடத்தில் மயக்கமடைந்த நிலையில், உடன் வந்த நபர் காரில் இருந்து கீழே இறங்க, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர்.போதையில் இருந்த அவர், தனது பெயர் தங்கராஜ் என்றும், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் என்றும் போதையில் உளறினார். அத்துடன் இல்லாமல், 'என்னை யார் கேட்பார்கள்? கேட்க முடிந்தால் கேளுங்கள்' என, போதை தலைக்கேறிய நிலையில் பிதற்றினார்.அப்பகுதியினர் சிலர் போதை ஆசாமியிடம், 'மது குடித்துவிட்டு கார் ஓட்டி வந்ததுடன், என்னை யார் கேட்பார்கள் என்று கூறுவது நியாயமா?' என்று கேட்டனர். இது குறித்த தகவல் அறிந்து வந்த பல்லடம் போலீசார், விபத்துக்குள்ளான இருவரையும், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மது போதையில் இருந்த தங்கராஜ் என்பவர் குறித்து விசாரிக்கையில், இவர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர் இல்லை என்பதும்,. நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளர் என்பது தெரிந்தது, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ