உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குறையாத நெரிசல் அலட்சியத்தால் அரசு நிதியும் வீண்

பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குறையாத நெரிசல் அலட்சியத்தால் அரசு நிதியும் வீண்

உடுமலை;பஸ் ஸ்டாண்ட் அருகே, நெடுஞ்சாலையை ஒட்டி, 'பார்க்கிங்' விதிமுறைகளை முறையாக அமல்படுத்தி, நெரிசலை தவிர்க்க வேண்டும்; நடைபாதை மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.உடுமலை பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டி, கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஐந்து வாயில்கள் வழியாக பயணியர் வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலையை கடக்கின்றனர்.எனவே, பஸ் ஸ்டாண்ட் 'ரவுண்டானா'வில் இருந்து, குறிப்பிட்ட துாரத்துக்கு, பாதசாரிகளும், வாகன ஓட்டுநர்களும் நெரிசலில் சிக்கி தவித்து வந்தனர்.எனவே, அவ்விடத்தில், தேசிய நெடுஞ்சாலையில் சென்டர்மீடியன் வைத்து, ஒரு பகுதியில் நடைபாதை அமைக்கப்பட்டது. மேலும், 'லிப்ட்' வசதியுடன் நடைமேம்பாலமும் கட்டப்பட்டது.இவ்வாறு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நெரிசலை தவிர்க்க, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியும், எவ்வித பலனும் இல்லாத நிலை உள்ளது.இதற்கு, பயன்பாட்டுக்கு வராத நடைமேம் பாலமும்,ரோட்டோரத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் முக்கிய காரணமாகியுள்ளது.பஸ் ஸ்டாண்ட் துவக்கத்தில் இருந்து, கல்பனா ரோடு சந்திப்பு வரை, தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வாகனங்களை நிறுத்திக்கொள்கின்றனர்.இதனால், சென்டர் மீடியனுக்கும், ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களும், இடையிலான குறுகலான பகுதியிலேயே அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும்.இதற்கிடையே, ஆங்காங்கே சென்டர்மீடியன் இடைவெளியில், பாதசாரிகள், நெடுஞ்சாலையை கடக்க முயல்கின்றனர். இதனால், மேற்கு நோக்கி செல்லும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதியை திக்... திக்... பயத்துடனுயே கடக்க வேண்டியுள்ளது.காலை, மாலை நேரங்களில், அதிக நெரிசலால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, பஸ் ஸ்டாண்ட்டை ஒட்டி, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், வாகனங்கள் நிறுத்துவது குறித்து போக்குவரத்து போலீசார் கண்காணித்து, எச்சரிக்க வேண்டும்.ரோட்டோரத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், பார்க்கிங் கயிறுகள் அமைத்து, வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.நடைபாதை மற்றும் நடை மேம்பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, பாதசாரிகள், பயமின்றி தேசிய நெடுஞ்சாலையை கடக்க உதவ வேண்டும். இப்பிரச்னை நீண்ட காலமாக இருந்தும், எந்த துறையினரும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ