உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நால்ரோட்டில் தீராத நெரிசல்  மடத்துக்குளத்தில் வேதனை

நால்ரோட்டில் தீராத நெரிசல்  மடத்துக்குளத்தில் வேதனை

உடுமலை; பிரதான ரோடு சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க எவ்வித கட்டமைப்பு வசதியும் இல்லாததால், மடத்துக்குளம் மக்கள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. அங்குள்ள பஸ் ஸ்டாண்ட் அருகே, கணியூர் மற்றும் குமரலிங்கம் ரோடு சந்திக்கும் நால்ரோடு சந்திப்பு உள்ளது. சந்திப்பு அருகிலேயே அரசு மருத்துவமனையும் அமைந்துள்ளது.இந்த சந்திப்பில், தானியங்கி சிக்னல், ரவுண்டானா என எவ்வித கட்டமைப்பு வசதியும் இல்லை. இதனால், இணைப்பு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முடியாமல், போக்குவரத்து பாதிக்கிறது.இணைப்பு ரோட்டில் வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் திரும்பும் போது, விபத்துகள் ஏற்படுகிறது. நீண்ட காலமாக நீடிக்கும் பிரச்னைக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி