உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கண் அழுத்த நோய் பாதிப்பு; மனித சங்கிலியில் விழிப்புணர்வு

கண் அழுத்த நோய் பாதிப்பு; மனித சங்கிலியில் விழிப்புணர்வு

திருப்பூர்; மார்ச் 10 முதல், 15 வரை உலக குளுக்கோமா வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, கண்ணில் ஏற்படும் 'குளுக்கோமா' (கண் அழுத்த நோய்) பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி விழிப்புணர்வு ஊர்வலம் திருப்பூரில் நடத்தப்பட்டது.திருப்பூர், தி ஐ பவுண்டேசன் சார்பில், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா முதல் ரயில்வே மேம்பால சந்திப்பு, கூட்டுறவு காய்கறி சந்தை வளாகம் வரை மனித சங்கிலி ஊர்வலம் நடந்தது. மருத்துவமனை பணியாளர்கள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.தி ஐ பவுண்டேசன் மருத்துவமனை இயக்குனர் சித்ரா ராமமூர்த்தி தலைமை வகித்தார். கோவை தி ஐ பவுண்டேசன் குளுக்கோமா மற்றும் குழந்தைகள் கண் மருத்துவ பிரிவு டாக்டர் முரளீதர் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.'குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,' என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை