உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆடுகளை ஒப்படைத்த விவசாயி

கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆடுகளை ஒப்படைத்த விவசாயி

திருப்பூர்: விவசாயி ஒருவர், தன் ஆடுகளை பாதுகாப்பாக வளர்த்து தரும்படி, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில், காங்கேயம், தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் தெரு நாய்களால் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. 'பலியாகும் ஆடுகளுக்கு, சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்து, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று வெள்ளகோவில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், சிறுக்களஞ்சி கிராமத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்து பட்டியில் இருந்த, 12 ஆடுகளை நாய்கள் கடித்தன. இதில், இரு ஆடுகள் இறந்தன. காயமடைந்த ஆடுகளை, பாதிக்கப்பட்ட விவசாயி, அங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று, ஆடுகளை பாதுகாப்பாக வளர்த்து தரும்படி கூறி, அங்கேயே விட்டார். இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை