உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பி.ஏ.பி., நீர் திறக்காவிட்டால் போராட்டம்: விவசாயிகள்

பி.ஏ.பி., நீர் திறக்காவிட்டால் போராட்டம்: விவசாயிகள்

பல்லடம்; ''நிறுத்தப்பட்ட மூன்றாம் மண்டலத்துக்கான பாசன நீரை உடனடியாக திறக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம்'' என, பி.ஏ.பி., விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடத்தில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம் கூறியதாவது: பி.ஏ.பி., 3ம் மண்டல பாசனத்தின் கீழ் உள்ள குண்டடம், காங்கயம், பொங்கலுார், உடுமலை பகுதிகளை உள்ளடக்கி, 95 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.இம்மண்டலத்துக்கு, தை 1ம் தேதி தண்ணீர் திறந்திருக்க வேண்டும். பல்வேறு குழப்பங்களுக்கு இடையே தான் தண்ணீர் திறக்கப்பட்டது. திடீரென, சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில், ஜெனரேட்டர் பழுதடைந்ததால், தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், 3ம் மண்டலத்துக்கு உட்பட்ட பி.ஏ.பி., பாசனத்தை நம்பி ஏறத்தாழ, 25 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திடீரென தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால், பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பி.ஏ.பி., மராமத்து பணிகளுக்காக மட்டும், ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.தண்ணீர் திறப்பதற்கு முன், பராமரிப்பு பணிகளை முடித்து, முழுமையாக தண்ணீர் வினியோகித்தால்தான், சாகுபடி முறையாக நடக்கும். ஓட்டு வங்கியை எதிர்பார்த்து அரசியல்வாதிகள் தலையிட்டு பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட்டதன் காரணமாகவே, மூன்றாம் மண்டலத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் சரிவர கிடைக்கவில்லை.பாசன திட்டத்துக்கான தண்ணீரை மாற்று பயன்பாட்டிற்கு உபயோகித்ததே தவறானது.எனவே, இரண்டு நாட்களுக்குள், 3ம் மண்டல பாசனத்துக்கான தண்ணீரை திறந்து விட வேண்டும். இல்லாவிடில், பொள்ளாச்சி பி.ஏ.பி., தலைமை பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை