விநாயகர் ஊர்வலம் வழிகாட்டு நெறிமுறை
திருப்பூர்:'விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்,' என, மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தற்காலிக விநாயகர் சிலைகள் நிறுவி, வழிபடும் நடைமுறை குறித்து, சட்டம் - ஒழுங்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பொதுமக்கள் மற்றும் அமைப்பினரால் நிறுவப்படும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத சிலைகள் மட்டும் பயன் படுத்த வேண்டும்.சாமளாபுரம் குளம், ஆண்டிபாளையம் மற்றும் பொங்கலுார் பி.ஏ.பி., வாய்க்கால், எஸ்.வி.புரம்., பி.ஏ.பி., வாய்க்கால், கணியூர், அமராவதி ஆறு, கெடிமேடு பி.ஏ.பி., வாய்க்கால் ஆகிய இடங்களில் மட்டுமே விசர்ஜனம் செய்ய வேண்டும். மேலும், காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.