உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சுரங்க பாதையில் பார்த்து போகணும்! சேறும், சகதியுமாக மாறி அவதி

சுரங்க பாதையில் பார்த்து போகணும்! சேறும், சகதியுமாக மாறி அவதி

உடுமலை: உடுமலை மேம்பால சுரங்கப்பாதை சுவர்களில், தண்ணீர் கசிவு அதிகரித்துள்ளதால், அப்பாதையின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. சேறும், சகதியுமாக ஒடுதளமும் மாறி வருவதால், வாகன ஓட்டுநர்கள் வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகில், அணுகுசாலையில், சுரங்கப்பாதை பயன்பாட்டில் உள்ளது.இந்த பாதையை, காந்திசவுக் மற்றும் சுற்றுப்பகுதியைச்சேர்ந்த வாகன ஓட்டுநர்கள் திருமூர்த்திமலை, அமராவதி உட்பட பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். தெற்குப்பகுதியிலிருந்து வரும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியரும், இப்பாதை வழியாக பள்ளிக்கு செல்கின்றனர்.வாகனப்போக்குவரத்து மிகுந்த இந்த சுரங்கபாதையின் இருபக்க சுவர்களிலும், தண்ணீர் கசிந்து வருகிறது. இதனால், சுவர்களின் உறுதித்தன்மை குறைந்து, கான்கிரீட் பூச்சு பெயர்ந்துள்ளது.நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில், இத்தகைய கசிவு நிரந்தரமாக இருப்பதால், சுவர்களின் உறுதித்தன்மை குறைந்து வாகன ஓட்டுநர்களை பயமுறுத்தி வருகிறது.மேலும், தொடர் கசிவு காரணமாக, ஓடுதள பகுதி முழுவதும், சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால், எதிரே வாகனங்கள் வரும் போது, சகதி தெறித்து, வாகன ஓட்டுநர்கள் வேதனைக்குள்ளாகின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து அதிகம் இருக்கும் போது, சுரங்க பாதையை பயன்படுத்துபவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இதே போல்,தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து, நகரப்பகுதிக்குள் செல்லாமல், பழநியாண்டவர் நகர், ஜீவாநகர் உட்பட பகுதிகளுக்கு செல்ல, பழநியாண்டவர் நகர் பகுதியில், ரயில்வே பாதையின் கீழ் தரைமட்ட பாலம் கட்டப்பட்டது.இந்த பாலத்தில், தண்ணீர் தேங்கும் போது, டீசல் என்ஜின் வைத்து முன் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.இருப்பினும், சுவர்களில், தண்ணீர் கசிவு மற்றும் மழை நீர் தேங்குவது ஆகிய காரணங்களால், பெரும்பாலான நாட்களில், இந்த பாலத்தை வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.நகராட்சி மற்றும் ரயில்வே நிர்வாகத்தினர், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை