உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வேன் மீது கார் மோதல்; மண்டப உரிமையாளர் பலி

வேன் மீது கார் மோதல்; மண்டப உரிமையாளர் பலி

பல்லடம்; திருப்பூர் அடுத்த வஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 38; திருமண மண்டப உரிமையாளர். நேற்று மதியம், சீனிவாசனும், இவரது உறவினர் அஸ்வின், 24 என்பவரும், காரில் உடுமலை-யில் இருந்து பல்லடம் நோக்கி வந்தனர்.அஸ்வின் காரை ஓட்ட, முன் பக்க சீட்டில் சீனிவாசன் அமர்ந்திருந்தார். பல்லடம் அருகே புள்ளியப்பம்பாளையம் அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த ஈச்சர் வேன் மீது கார் மோதியது.இதில் சீனிவாசன் அதே இடத்தில் இறந்தார். காரை ஓட்டி வந்த அஸ்வின், காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.காரில் பயணித்த இருவரும் சீட் பெல்ட் அணிந்திருந்தத நிலையில், விபத்தின் போது 'ஏர் பேக்' விரிந்துள்ளது.இருப்பினும், கார், அதிவேகமாக வந்ததால் அழுத்தம் தாங்காமல் 'ஏர் பேக்' வெடித்து கார் விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி