நிஜாமுதீன் - பரூனிக்கு ஹோலி சிறப்பு ரயில்
திருப்பூர்; 'ஹோலி பண்டிகையை முன்னிட்டு, திருவனந்தபுரம், போத்தனுாரில் இருந்து நிஜாமுதீன் மற்றும் பரூனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் மார்ச், 13ம் தேதி ேஹாலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.சொந்த ஊர் சென்று திரும்பும் வடமாநிலத்தவர் வசதிக்காக, திருவனந்தபுரத்தில் இருந்து நிஜாமுதீன் (டில்லி), போத்தனுாரில் இருந்து பரூனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இன்று (7ம் தேதி) மற்றும் 14ம் தேதி, மதியம், 2:15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் நிஜாமுதீன் சிறப்பு ரயில் (எண்:06073) வெள்ளி இரவு, 8:40 மணிக்கு நிஜாமுதீன் சென்றடையும்.இவ்விரு ரயில்கள், போத்தனுார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஸ்டேஷனில் இரண்டு ரயில்களும் நின்று செல்லும் என, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.