உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அனைவருக்கும் வீடு திட்டம்: பயனாளிகள் கணக்கெடுப்பு

அனைவருக்கும் வீடு திட்டம்: பயனாளிகள் கணக்கெடுப்பு

உடுமலை : உடுமலையில், அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன்பெறுவதற்கான பயனாளிகள் தேர்வு நடக்கிறது.மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் பயன்பெறுவதற்கு, பயனாளிகள் பட்டியல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், ஒன்றிய நிர்வாகத்தின் வாயிலாக எடுக்கப்பட்டது.உடுமலை ஒன்றியத்திலும், அனைவருக்கும் வீடு திட்டத்துக்கான பயனாளிகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 458 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.நடப்பாண்டில் திட்டத்தில் பயன்பெறுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி உடுமலை ஒன்றியத்தில், 63 பயனாளிகளுக்கு திட்டத்தில் பயன்பெறுவதற்கு இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது தகுதியுள்ள பயனாளிகள் குறித்து, மீண்டும் ஒன்றிய அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்த துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி