வளர்ச்சி பணி எப்படி? கலெக்டர் திடீர் ஆய்வு
திருப்பூர்:திருப்பூர் மற்றும் ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் திட்ட பணிகள் குறித்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் நேற்று ஆய்வு செய்தார்.ஊத்துக்குளியில் அணைப்பாளையம் குளம், செங்காளிபாளையம் குளம், செங்கப்பள்ளி ஊராட்சி, செந்தில் நகர் மற்றும் சாணார்பாளையத்தில் கனவு இல்லம் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், அணைப்பாளையத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டார்.திருப்பூர் ஒன்றியம் ஈட்டி வீரம்பாளையம் ஊராட்சி, அப்பியாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருடன் அமர்ந்து, கலெக்டர் மதிய உணவு சாப்பிட்டார். தொடர்ந்து, அப்பியாபாளையம் ஆதிதிராவிடர் காலனியில், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம் மற்றும் கனவு இல்லம் திட்டத்தில் நடைபெற்றுவரும் பணிகளை ஆய்வு செய்தார். தாசில்தார் சரவணன், பி.டி.ஓ.,க்கள் அனார்கலி, வேலுச்சாமி, சரவணன், மகேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.