உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 8ம் வகுப்பு பாஸ் செய்தால் ஐ.டி.ஐ.,க்கு விண்ணப்பிக்கலாம்!

8ம் வகுப்பு பாஸ் செய்தால் ஐ.டி.ஐ.,க்கு விண்ணப்பிக்கலாம்!

உடுமலை;உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கு மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.எட்டாம் வகுப்பு தேர்ச்சி, ஒன்பது, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர், விண்ணப்பிக்கலாம். கல்லுாரி மாணவ, மாணவியர் மேம்பட்ட தொழில்நுட்ப படிப்புகளான 'இண்டஸ்டரி 4.0' மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேரலாம். தரமான பயிற்சி, மாதாந்திர உதவித்தொகை, 750 ரூபாய் வழங்கப்படும். குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளில் சேர்பவர்களுக்கு 'டூல்கிட்' வழங்கப்படும்.அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்து பயிற்சியில் சேரும் அனைத்து மாணவியருக்கும் அரசின் புதுமைப் பெண் திட்டத்தில், ரூ. ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ள மாணவ, மாணவியர் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகவும், நேரிலும் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை