உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பெண்கள் பள்ளி முன் அதிகரித்த ஆக்கிரமிப்பு

அரசு பெண்கள் பள்ளி முன் அதிகரித்த ஆக்கிரமிப்பு

அவிநாசி; அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன், பிளக்ஸ் பேனர்கள், பெட்டிக்கடைகள், தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமிப்பால் மாணவியருக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார கிராமங்கள் உட்பட பல பகுதிகளை சேர்ந்த, 900 மாணவியர் படித்து வருகின்றனர்.பள்ளியின் நுழைவாயில் முன் பிளக்ஸ் பேனர்கள், வைத்துள்ளனர். இதனால், மாணவியர் காத்திருந்து ரோட்டை கடப்பதற்கு இடையூறு ஏற்படும் விதத்தில் உள்ளது.அதன் அருகிலேயே இரண்டுக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகளில் ரோட்டை மறித்து நடைபாதையை ஆக்கிரமித்து பழங்கள் விற்பனை செய்வது என உள்ளதால் பஸ்சுக்காக மாணவியர் ரோட்டில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இரண்டு நாள் முன், ஒரு பெட்டிக்கடையும் முளைத்துள்ளது. இதனால், இட நெருக்கடி ஏற்பட்டு விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.நல்லது நண்பர்கள் அறக்கட்டளை ரவிக்குமார் கூறுகையில், ''தற்போது கோடை காலம் துவங்கும் முன்பே கடும் வெயில் வாட்டி வதைக்கிறது பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே திருப்பூர், ஈரோடு, சேலம் பகுதிகளுக்கு செல்ல பயணிகள் காத்திருக்கின்றனர்.வெயில் கொளுத்தும் இந்நேரத்தில், நிழற்குடை இல்லை. அவ்வப்போது தனியார் பங்களிப்பில், தற்காலிக பந்தல் மட்டுமே வெயில் காலங்களில் போடப்படுகிறது. எனவே, நிழற்குடை அமைத்து பயணிகள் பயன் பெறவும் பள்ளி முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மாணவியர் விபத்து அச்சமின்றி ரோட்டை கடப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை