உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீவன உற்பத்தியை பெருக்கினால் கறிக்கோழி தொழில் மேம்படும்

தீவன உற்பத்தியை பெருக்கினால் கறிக்கோழி தொழில் மேம்படும்

''தீவன உற்பத்தியை பெருக்கினால் கறிக்கோழி தொழில் மேம்படும்'' என்கின்றனர் கறிக்கோழி உற்பத்தியாளர்கள்.பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) செயல்பட்டு வருகிறது. கறிக்கோழிகளின் அன்றாட கொள்முதல் விலையை இக்குழு நிர்ணயிக்கிறது. சிறு, குறு தொழிலாக நடந்து வரும் கறிக்கோழி உற்பத்தி தொழில், தமிழகம் முழுவதும் பரவலாக உள்ளது.கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு (பி.சி.சி.,) செயலாளர் சுவாதி கண்ணன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பரவலாக கறிக்கோழி உற்பத்தி தொழில் நடந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் உள்ள, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம், தினசரி, 1 கோடி கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தொழிலில் உள்ள பல இடையூறுகளைக் களைந்தால், தொழில் மேலும் வளர்ச்சி பெறும்.மின் வாரியம், தொழில் துறைக்கு இருப்பது போல், கறிக்கோழி தொழிலுக்கும் மின் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. இதை சலுகை கட்டணத்தில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோழிகளின் முக்கிய தீவனங்களான சோயா, மக்காச்சோளம் ஆகியவை தமிழகத்தில் போதிய அளவு உற்பத்தி இல்லை. வட மாநிலங்களில் இருந்து தான் அதிக அளவில் இவை இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றுக்கான இறக்குமதி கட்டணங்களை மத்திய அரசு குறைக்க வேண்டும். கறிக்கோழி தொழிலில் தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதால், நுாறு நாள் திட்ட பணியாளர்களை விவசாயம் உட்பட கறிக்கோழி தொழிலிலும் பயன்படுத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். வேலைவாய்ப்பு தேடி இங்கு வரும் வட மாநில தொழிலாளர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு சுவாதி கண்ணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ