உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடுப்பளவு மழைநீர் தேக்கம்; மக்கள் தத்தளிப்பு

இடுப்பளவு மழைநீர் தேக்கம்; மக்கள் தத்தளிப்பு

கால்வாய் அடைப்புதிருப்பூர், 13வது வார்டு, கரைப்புதுார் ஊராட்சி, பாச்சாங்காட்டுப்பாளையத்தில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது.- குமார், பாச்சாங்காட்டுபாளையம். (படம் உண்டு)மழைநீர் தேக்கம்திருப்பூர், 10வது வார்டு, அனுப்பர்பாளையம், காமராஜர் காலனி, மாரியம்மன் கோவில் வீதியில் மழை பெய்யும் போதெல்லாம், இடுப்பளவு தண்ணீர் வழிநெடுகிலும் தேங்குகிறது.- பிரகாஷ்குமார், காமராஜர் காலனி. (படம் உண்டு)கரைப்புதுார் ஊராட்சி, அய்யம்பாளையம், போயர் வீதியில், மழை பெய்யும் போதெல்லாம், வீடுகளுக்கு முன் மழைநீர் தேங்குகிறது. ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும், மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.- பாலகிருஷ்ணன், அய்யம்பாளையம். (படம் உண்டு)திருப்பூர், கே.பி.என்., தோட்டம், எஸ்.எஸ்., நகர் விரிவு பகுதியில் மழைபெய்யும் போதெல்லாம், மழைநீர் தேங்கி, வெளியேற வழியில்லாமல் உள்ளது. பாதசாரிகள் அதிலே நடந்து செல்ல வேண்டியுள்ளது.- கோபாலகிருஷ்ணன், கே.பி.என்., தோட்டம். (படம் உண்டு)திருப்பூர், கொங்கு நகர் முதல் வீதி, எக்ஸ்டென்ஷனில் மழைநீர் கால்வாயை விட சாலை உயரமாக உள்ளது. எப்போதுமே மழைநீர் தேங்கி நிற்கிறது.- கீதா, கொங்கு நகர். (படம் உண்டு)கஞ்சம்பாளையத்தில் இருந்து போயம்பாளையம் செல்லும் ஓடை ரோட்டில் மழைநீர் தேங்கி, சாலை சேறும், சகதியுமாக உள்ளது.- சுப்பு, கஞ்சம்பாளையம். (படம் உண்டு)அவிநாசி, உப்பிலிபாளையம், அக்ரி காலனியில் வழிந்தோட வழியில்லாமல் மழைநீர் தேங்கி நிற்கிறது.- சுரேஷ் பாலாஜி, உப்பிலிபாளையம்மழைநீருடன் கழிவுநீர்திருப்பூர், சாமுண்டிபுரம், எம்.ஜி.ஆர்., நகர் முதல் வீதியில் மழை பெய்யும் போது, மழைநீருடன் கழிவுநீர் தேங்குகிறது. தண்ணீர் வெளியேற 'டிஸ்போசல் பாயின்ட்' இல்லாமல் தண்ணீர் அப்படியே தேங்குகிறது.- மோகனசுந்தரம், சாமுண்டிபுரம். (படம் உண்டு)மின் விபத்து வாய்ப்புதிருப்பூர், அனுப்பர்பாளையம், திலகர் நகர் பஸ் ஸ்டாப், மின் மயான ரோட்டில், சாலையோரம் தாழ்வாக சுவிட்ச் பாக்ஸ் உள்ளது. மின் விபத்துக்கு வாய்ப்புள்ளது.- வெற்றியரசு, திலகர் நகர். (படம் உண்டு)இருள் சூழ்கிறதுதிருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையம், டி.கே.டி., மில் ஸ்டாப்பில் தெருவிளக்கு எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி புதுவிளக்கு பொருத்த வேண்டும்.- சுதா, தென்னம்பாளையம். (படம் உண்டு)திருப்பூர், பாரப்பாளையம், செல்லம் நகரில் மூன்று தெருவிளக்குகள் எரிவதில்லை. வீதி முழுதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது.- ராஜா, பாரப்பாளையம். (படம் உண்டு)தண்ணீர் வீண்திருப்பூர், 15 வேலம்பாளையம், ஜவஹர் நகரில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.- வேலுமணி, ஜவஹர்நகர். (படம் உண்டு)திருப்பூர், ஊத்துக்குளி ரோடு - யூனியன் மில் ரோடு சந்திப்பில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. சாலை சேதமாகும் முன் அடைப்பை சீர்செய்ய வேண்டும்.- சந்தோஷ்குமார், யூனியன் மில் ரோடு. (படம் உண்டு)விபத்து அபாயம்திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் வேகத்தடை வேண்டும். வாகனங்கள் வேகமாக, பயணிப்பதால், விபத்து அபாயம் உள்ளது.- சூர்யா, தாராபுரம் ரோடு. (படம் உண்டு)சுகாதாரச் சீர்கேடுதிருப்பூர், 32வது வார்டு, தொட்டிய மண்ணரை, எம்.ஜி.ஆர்., நகர் முதல் வீதியில் குடியிருப்புக்கு மத்தியில் குப்பை கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. குப்பையை அள்ள வேண்டும்.- ராஜசேகர், தொட்டிய மண்ணரை. (படம் உண்டு)'அழிந்த' எச்சரிக்கைதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, குத்துாஸ்புரம், மாரியம்மன் கோவில் வீதியில், எச்சரிக்கை பலகை ஸ்டிக்கர் முழுதும் அழிந்து விட்டது. ரயில் தண்டவாளம் அருகே இருப்பதால், எச்சரிக்க வேறு பலகை வைக்க வேண்டும்.- கோவிந்தராஜ், குத்துாஸ்புரம். (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ