மேலும் செய்திகள்
பனியன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்
21-Aug-2024
திருப்பூர் : இந்தியாவின் அனைத்து பகுதிகளை சேர்ந்த சில்லரை வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்ய வசதியாக, திருப்பூரின் மையப்பகுதியில், மத்திய, மாநில அரசுகள் உதவியுடன், பிரமாண்டமான வணிக வளாகம் அமைக்க வேண்டும்.ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சி கண்காட்சி நடத்துவது போல், பல்வேறு மாநில வியாபாரிகளை ஒருங்கிணைத்து, உள்நாட்டு விற்பனை மேம்பாட்டுக்கான கண்காட்சிகளும் நடத்தப்பட வேண்டும் என்பது, பலரது கோரிக்கையாக உள்ளது.திருப்பூரில் உள்ள குறு, சிறு பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் பயன்பெறும் வகையில், சில்லரை விற்பனைக்கான, பனியன் வணிக வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.இதுகுறித்து பனியன் உற்பத்தியாளர்கள் சிலர் கூறியதாவது:பனியன் மொத்த விற்பனைக்காக, காதர்பேட்டையில், கடைகள் உள்ளன. பனியன் ஆடைகள் சில்லரை விற்பனை செய்ய ஏதுவாக, வணிக வளாகங்கள் இல்லை. திருப்பூரில் பனியன் மார்க்கெட் வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.மாநகராட்சி நிர்வாகம், சிறப்பு திட்டத்தில், சிறு வணிக வளாகங்கள் அமைத்து கொடுக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில், வணிக வளாகங்கள் கட்டினால், வியாபாரிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்கள் ஒரே இடத்தில் ஆடைகள் வாங்கவும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
21-Aug-2024