இடையூறு களைந்தால் இனிது
அகலாத குப்பைதிருப்பூர், திருவள்ளுவர் தோட்டம் ரோட்டரி வீதியில் ஏராளமான குப்பைகள் ரோட்டோரம் கொட்டப்பட்டுள்ளன. இது அகற்றப்படாமல் உள்ளது.- வின்சென்ட் ராஜ், ராயபுரம்.லாரிகள் இடையூறுதிருப்பூர், ஊத்துக்குளி ரோடு, டி.எம்.எப்., பாலம் அருகே ரோட்டோரம் போக்குவரத்துக்கு இடையூறாக லாரிகள் நிற்கின்றன. விபத்து அபாயம் உள்ளது.- பாலு, திருப்பூர்.பல்லாங்குழி சாலைதிருப்பூர், பார்க் ரோட்டில் மாநகராட்சி பூங்கா அருகே பல இடங்களில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.- ஆறுசாமி, திருப்பூர்.கால்வாய் அடைப்புதிருப்பூர், பி.என்., ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கண்ணகி நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார கேடாக உள்ளது.- குமார், கண்ணகி நகர்.துார்வாரப்படுமா?திருப்பூர், 17வது வார்டு திருவள்ளுவர் நகர் கிழக்கு 1வது வீதியில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, பல மாதங்களாகி உள்ளது. கால்வாயை துார்வார வேண்டும்.- ரஞ்சித், திருவள்ளுவர் நகர்.பகலில் 'ஒளிர்கிறது'திருப்பூர் முத்தையன் கோவில் ரோட்டில் உள்ள தெருவிளக்கு தொடர்ந்து பகலில் எரிந்து கொண்டிருக்கிறது.- பாலு, தென்னம்பாளையம்.போக்குவரத்து இடையூறுதிருமுருகன் பூண்டி ரிங் ரோட்டில் பழைய ஸ்டேஷன் இருந்த பகுதியில் ரோட்டோரம் மண் மற்றும் அங்குள்ள குப்பையை அகற்றினால், போக்குவரத்து பிரச்னை இருக்காது.- விஜி, திருமுருகன்பூண்டி.இதுவா சாலை?திருப்பூர் 50வது வார்டு, இளங்கோவில், இரண்டாவது வீதி மூனு முக்கு ரோடு படுமோசமாக, தண்ணீர் தேங்கி உள்ளது.- தேவராஜ், திருப்பூர்.ரியாக் ஷன்புதிய கால்வாய்தாராபுரம், சுந்தரம் அக்ரஹாரத்தில் சாக்கடை கால்வாய் பிரச்னைக்கு நடவடிக்கை எடுத்து, புதிய கால்வாய் கட்டப்பட்டது.- இளங்கோ, தாராபுரம்.