உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிக மொழி அறிந்தால் எல்லையற்ற வாய்ப்புகள்

அதிக மொழி அறிந்தால் எல்லையற்ற வாய்ப்புகள்

திருப்பூர்; தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை அரசியல் கட்சிகளால் விமர்சனத்திற்குள்ளானாலும், பொதுமக்கள் மத்தியில் இதற்கான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 'மும்மொழி மட்டுமின்றி, கூடுதல் மொழிகளும் கற்றால், சிறப்புத்தான்' என்று பச்சைக்கொடி காட்டுகின்றனர்.

அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம்

சுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர், களஞ்சியம் விவசாயிகள் சங்கம்:எனக்கு ஹிந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, குஜராத்தி, ராஜஸ்தானி ஆகிய மொழிகளும் தெரியும். மொழியறிவு இருப்பதால், பிற மாநிலங்களுக்கு வர்த்தக ரீதியாக பயணித்தாலும், நம் மாநிலத்தில் இருப்பது போலவே உணர முடிகிறது. வடமாநிலங்களில் வியாபாரம் செய்யவே ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும். சகஜமாக அனைவரிடமும் பேச மொழியறிவு மிக அவசியம்.அறிவை வளர்க்க மொழியறிவு அவசியம். தமிழ், ஆங்கிலத்தை கடந்து மூன்றாவது மொழியாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கான வாய்ப்பை அரசே தேடித்தரும் போது, நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளலாம் அன்னை மொழி காப்போம். அதில் மாறுதல் இல்லை. அதே நேரம், அனைத்து மொழிகளும் கற்பதும் அவசியம். பாடத்திட்டத்தில் ஹிந்தி வரவேற்கத்தக்கது தான்.

ஹிந்தி சரளமாக பேசுவோர் அதிகம்

நித்யானந்தன் மோகன், ஓட்டல் வணிக மேலாளர், துபாய் (திருப்பூரில் படித்தவர்):மொழியறிவு என்பது பெயருக்கு பின் போடப்படுவது போன்ற 'படிப்பு தகுதியை' போன்றது. வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு தேர்வு செய்யும் முன்பு, உங்களுக்கு எந்தெந்த மொழி புரிந்து கொள்ள தெரியும் என கேட்பர். முதன்மையானதாக, அந்நாட்டு மொழியோ அல்லது மாற்றாக ஹிந்தியோ தெரிந்திருக்க வேண்டும்; அப்போது தான் வேலையே கிடைக்கும்.பள்ளி படிக்கும் நாட்களில் இருந்தே ஹிந்தி கற்றுக்கொண்டால் தான் பின்னாளில் பிரச்னை இல்லை. வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக 'ஸ்போக்கன் இங்கிலீஷ்' போல், ஹிந்தியை பலரும் கற்றுக்கொள்கிறார். இந்தியாவை சேர்ந்தவர்களை நாம் வெளிநாடுகளில் சந்தித்தால், பெரும்பாலானோர் ஹிந்தியில் தான் பேசுகின்றனர். ஆங்கிலத்தை விட, ஹிந்தி சரளாமாக பேசுபவர்கள் தான் அதிகம் பேர் இருக்கின்றனர். ஹிந்தி படிப்பது வேலைவாய்ப்புக்கு பெரிதும் உதவும்.

ஹிந்தி அறிந்தால் கூடுதல் தகுதி

ஷபின் தாமஸ், இன்ஜினியர், ராஜஸ்தான்(திருப்பூரில் படித்தவர்):ராஜஸ்தானில் உள்ள 'ஆயில் இந்தியா' நிறுவனத்தில் உற்பத்தி பொறியாளராகப் பணிபுரிகிறேன். ஹிந்தி கற்றுக்கொள்வது, தகவல் தொடர்பு மற்றும் வேலைவாய்ப்பில் பெரிதும் பயனுள்ளதாக உள்ளது.நமக்கான புதிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் மொழியறிவை விரிவுபடுத்திக் கொள்வது மிக அவசியம். நாட்டின் பல்வேறு பகுதிக்கு செல்லவும், எதிர்காலத்தை திட்டமிட்டு கொள்ளவும், ஹிந்தி பெரிதும் உதவும்.வெளிநாடு பணிகளுக்கு செல்ல வேண்டுமெனில், மற்ற நாட்டு மாணவர்களுடன் போட்டியை எதிர்கொள்ள, நேர்முகத்தேர்வுகளில் பங்கேற்க, ஹிந்தி படிக்க, எழுத, புரிந்து கொள்ள தெரிந்திருப்பது கூடுதல் தகுதி யாக இருந்தது. ஹிந்தி மட்டுமின்றி ஸ்பானிஷ், ஜெர்மன் அல்லது பிரெஞ்ச் மொழிகளை கற்றுக்கொள்வதால், ஐ.டி., வணிகம், சுற்றுலா துறைகளில் வேலைவாய்ப்பு பெற முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sridhar
பிப் 22, 2025 13:45

மும்மொழி கொள்கையை ஒப்புக்கொள்வது வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதற்கு வேண்டி அல்ல. ஒரு நிபுணர் குழு பலவருடங்கள் சிந்தித்து விவாதித்து ஒரு கொள்கை முடிவு எடுத்து அது நாடு முழுவதும் அமல் படுத்தப்படும்போது அதை மதிக்கும் பண்பாடு மனநிலை வேண்டும். சரியான புரிதல் இல்லாத நிலையில் இருந்துகொண்டு ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து கொண்டிருக்கும் செயல் மக்களை ஈவேரா போல் அசிங்கமாக்கிவிடும்.


B.V. Prakash
பிப் 22, 2025 11:12

டூரிஸ்ட் கைடாக மட்டும் போகலாம். வேற பெரிய வாய்ப்பு கிடைக்காது


முக்கிய வீடியோ