உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குறு மைய போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டு

குறு மைய போட்டிகளில் வென்றவர்களுக்கு பாராட்டு

உடுமலை : குறுமைய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.உடுமலை குறுமைய அளவில் மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இதில் குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.மாணவியருக்கான ஜூனியர் கபடி போட்டியில், இரண்டாமிடம், சீனியர், சூப்பர்சீனியர் பிரிவில், முதலிடமும், மாணவர்களுக்கான கபடி போட்டி சீனியர் பிரிவில், முதலிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.கேரம் விளையாட்டில் மாணவியர் சூப்பர் சீனியர் ஒற்றையர் ஆட்டத்தில், இரண்டாமிடமும், மாணவர்களுக்கான சீனியர் போட்டியில் முதலிடமும், செஸ் போட்டியில் மாணவியர் சூப்பர் சீனியர் பிரிவில், இரண்டாமிடம், மாணவர்களுக்கான சீனியர் போட்டியில் இரண்டாமிடமும் பெற்றுள்ளனர்.இதைத்தொடர்ந்து தடகளப்போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். குழு போட்டியில் முதலிடத்திலும், தடகளப்போட்டியில் முதல் மற்றும் இரண்டாமிடத்தில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.இப்போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவர்களை, பள்ளித்தலைமையாசிரியர் மாரியப்பன், உதவித்தலைமையாசிரியர்கள் செந்தில்குமார், தமிழ்செல்வி பாராட்டு தெரிவித்தனர்.மேலும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயராகவன், சந்திரபாபு உள்ளிட்டோருக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ரமேஷ் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை