மேலும் செய்திகள்
'ஆறுதலான வார்த்தையே வெற்றி தேடித்தரும்'
19-Aug-2024
திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் குலாலர் பிள்ளையார் கோவில் உள்ளது. சுப நிகழ்ச்சிகளை செய்வோர், குலாலர் பிள்ளையாரை வழிபட்ட பின்னரே துவங்குவர். அந்த மரபு, நுாறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.குலாலர் பிள்ளையார் கமிட்டி தலைவர் தனபாலன் கூறிய தாவது:திருப்பூர் நகரம், 1850ம் ஆண்டுகளில், சிறு கிராமமாக இருந்துள்ளது. நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள, வாலிபாளையம், பாரப்பாளையம், தென்கரையில் அமைந்துள்ள கருவம்பாளையம், கோட்டைய காடு, நல்லூர், ராக்கியாபாளையம் கிராமப் பகுதிகளில், மண் பாத்திரங்கள் செய்யும் தொழில் செய்தவர்கள் வசித்து வந்தனர்.கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த, வயதில் மூத்த குலாலர் ஒருவரின் கனவில் விநாயகப் பெருமான் தோன்றி, நீங்கள் வியாபாரம் செய்கின்ற இடத்தில் ஒரு கோவில்கட்டி வழிபடுங்கள். வேண்டிய வரங்களை கொடுப்பேன்' என்று கூறினார்.அடுத்ததாக, 16 பங்காளி குடும்ப பெரியவர்கள் ஒன்றிணைந்து, விநாயகர் கோவில் கட்டினர். திருப்பூர் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள், திருமண வைபவத்துக்கு முன் மணமகன், மணமகள் வீட்டார், இக்கோவிலில், உப்பு - சர்க்கரை மாற்றுவது, திருமாங்கல்யத்துக்கு தங்கம் கொடுப்பது, புதுக்கணக்கு துவங்குவது ஆகியன சிறப்பாக நடைபெற்று வருகிறது.
19-Aug-2024