உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேக விழா

சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் 6ம் தேதி கும்பாபிஷேக விழா

அவிநாசி;அவிநாசி அருகே சேவூரில் எழுந்தருளியுள்ள அறம் வளர்த்த நாயகி அம்பிகை உடனமர் வாலீஸ்வரர் கோவிலில், 6ம் தேதி கும்பாபிேஷகம் நடப்பதை முன்னிட்டு, யாகசாலை பூஜைகள் இன்று துவங்குகிறது.இக்கோவிலில், திருப்பணிகள் நிறைவுற்று கும்பாபிேஷக விழா துவங்கியுள்ளது. இதற்காக, கோவிலருகே யாகசாலை அமைக்கப்பட்டு இன்று யாகபூஜைகள் துவங்குகிறது. இன்றும், நாளையும் யாகசாலை பூஜைகள் நடந்து, 6ம் தேதி அதிகாலை நிறைவுகால யாகபூஜை நடக்கிறது.அதனை தொடர்ந்து, காலை 7:45 - 8:45 மணிக்குள் கோபுர விமானங்கள் மற்றும் மூலவ மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்க வாசக சுவாமி தலைமை வகிக்கிறார். சிரவையாதீனம் குமரகுருபர சுவாமி, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சி தாச சுவாமி மற்றும் அரண் பணி அறக்கட்டளை தியாகராஜன், சிவாசலம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, 6ம் தேதி காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறையினர் மற்றும் சேவூர் கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ