மேலும் செய்திகள்
புதிய ரேஷன் கார்டு! இனி, காத்திருக்க வேண்டாம்
23-Aug-2024
திருப்பூர்: தொழிலாளர் நலவாரியத்தில், கேட்பு விண்ணப்பங்களில் உள்ள குறைபாடுகளை, 10 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என, தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.தமிழக அரசின், தொழிலாளர் துறையில், கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக, 18 வகையான தொழிலாளர் நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொழிலாளருக்கு பல்வேறு நல உதவி வழங்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டில், 10 ஆயிரத்து, 867 நபர்களுக்கு, 8.54 கோடி ரூபாய் அளவுக்கு நலஉதவி வழங்கப்பட்டுள்ளது.உதவி கமிஷனர் அலுவலகத்தில், பதிவு புதுப்பித்தல் மற்றும் கேட்பு மனுஷக்கள் விண்ணப்பித்த தொழிலாளர்களுக்கு, விண்ணப்பத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, குறுஞ்செய்தி மூலமாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.குறைபாடு உள்ள விண்ணப்பதாரர், சரிசெய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என, தொழிற்சங்க கூட்டம் நடத்தி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.எல்.பி.எப்., - சி.ஐ.டி.யு.,- ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., - எம்.எம்.எஸ்., தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்கினர். தொழிலாளர் அளித்த விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தொழிற்சங்கம் வாயிலாக தொழிலாளருக்கு தகவல் தெரிவித்து, விண்ணப்பம் சரிசெய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து உதவி கமிஷனர் செந்தில்குமரன் கூறுகையில், ''விண்ணப்பங்கள் முறையான தகவல்களுடன் இல்லாத தொழிலாளர்கள், நிவர்த்தி செய்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், 10 நாட்களுக்குள் நிவர்த்தி செய்து, இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்,'' என்றார்.
23-Aug-2024