மேலும் செய்திகள்
கோர்ட் புறக்கணிப்பு; வக்கீல்கள் போராட்டம்
20-Feb-2025
வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு
20-Feb-2025
திருப்பூர்; மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வக்கீல்கள் நடைமுறை சட்ட திருத்தம் தங்கள் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளதால், சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் உள்ள கோர்ட்களில் பணியாற்றும் வக்கீல்கள் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். திருப்பூர் பார் அசோசி யேசன், திருப்பூர் அட்வ கேட்ஸ் அசோசியேசன், திருப்பூர் மாவட்ட கோர்ட் வக்கீல்கள் சங்கம் ஆகிய மூன்று அமைப்புகளைச் சேர்ந்த வக்கீல்கள், நேற்று ஒரு நாள் கோர்ட் நடவடிக்கையில் பங்கேற்காமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.அவிநாசி, பல்லடம், உடுமலை, ஊத்துக்குளி தாலுகா கோர்ட்களிலும் வக்கீல்கள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.அனைத்து கோர்ட்களிலும், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் மற்றும் கோர்ட் ஊழியர்கள் வழக்கம் போல் பணியாற்றினர். நேற்று விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறு தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
20-Feb-2025
20-Feb-2025