திருப்பூர் மாவட்டத்தில் 14 மருந்தக உரிமம் ரத்து
திருப்பூர் : மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்து விற்பனை செய்த, 14 மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், சில மருந்தகங்களில் மனநல மாத்திரை, வலி நிவாரண மருந்துகள், துாக்க மாத்திரை, கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மருத்துவர்களின் பரிந்துரை, ஒப்புகை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு துறை 2024 ஜன., முதல், 2025 ஜன., வரை நடத்திய தொடர் ஆய்வை தொடர்ந்து, மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து விற்பனை செய்த, 11 மருந்தகங்களின் உரிமம் தற்காலிகமாகவும், மூன்று மருந்தகங்களின் உரிமம் நிரந்தரமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், 'போதை பயன்பாட்டுக்கான மாத்திரை, மருந்து, ஊசி அதிகளவில் பயன்படுத்துவது, குறிப்பிட்ட ஒரு பகுதியில் விற்பனையாவது குறித்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 'சட்டவிரோதமாக மருந்து, மாத்திரை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.