உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெண் கொலை தொழிலாளிக்கு ஆயுள்

பெண் கொலை தொழிலாளிக்கு ஆயுள்

திருப்பூர்; காங்கயம், கரிய கவுண்டம்புதுாரை சேர்ந்த ரேவதி, 35. நுால் மில்லில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2022 செப்., மாதம் பி.ஏ.பி., வாய்க்கால் அருகே பிணமாக கிடந்தார்.ஊதியூர் போலீசார் விசாரித்ததில், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து உமேஷ்ரிஷிதேவை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று உமேஷ் ரிஷிதேவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுரேஷ் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ