உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வணிகர் சங்க கிளை துவக்க விழா

வணிகர் சங்க கிளை துவக்க விழா

பல்லடம்:பல்லடத்தில், வணிகர் சங்க பேரமைப்பின் கிளை துவக்க விழா நடந்தது.பல்லடம் தினசரி மார்க்கெட் வளாகத்தில் நடந்த கிளை துவக்க விழாவுக்கு, வணிகர் சங்க பேரமைப்பின் பல்லடம் வட்டார தலைவர் கண்ணையன் தலைமை வகித்தார். இணை செயலாளர் செல்வராஜ் வரவேற்றார்.பொருளாளர் தனசீலன், துணைச் செயலாளர் பிர்லா போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் 'லாலா' கணேசன், மாநகர் மாவட்ட தலைவர் ஜான் வர்கீஸ், மாவட்ட ஆலோசகர் அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான சான்றுகள் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டன. கிளைத் தலைவராக ரங்கராஜ், செயலாளர் சுப்பிரமணியம் மற்றும் பொருளாளராக தங்கராஜ் ஆகியோர் உட்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டனர்.நாளை, திருப்பூரில் நடக்கும் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று கூட்டத்தை சிறப்பாக நடத்திக் கொடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அண்ணாதுரை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி