உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மெத்தபெட்டமைன் போதை பயன்படுத்திய கும்பல் கைது

மெத்தபெட்டமைன் போதை பயன்படுத்திய கும்பல் கைது

திருப்பூர்; தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பயன்படுத்திய ஐந்து பேரை திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர் பகுதியில் போதை பொருட்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வகையில், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ரகசியமாக கொண்டு வந்து, பனியன் தொழிலாளர்கள் தாங்கள் தங்கும் அறையில் வைத்து பயன்படுத்துவதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் போலீசார் சோதனை நடத்தினர்.அதில், ஒரு அறையில் தங்கியிருந்த ஐந்து பேரிடம் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், தடை செய்யப்பட்ட மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிந்தது. அறையில் தங்கியுள்ள மதுரையை சேர்ந்த அசோக், 32 என்பவர், பெங்களூருவிலிருந்து மெத்தபெட்டமைன் போதைப் பொருளை வாங்கி வந்து, தனது நண்பர்கள் தினேஷ்குமார், 43, ரங்கராஜ், 29, மணிகண்டன், 22 மற்றும் சதீஸ்குமார், 27 ஆகியோருடன் சேர்ந்து பயன்படுத்தியது தெரிந்தது.ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், 5 கிராம் மெத்தபெட்டமைன், ஊசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். திருப்பூர் ஜே.எம்., (எண்: 1) கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், ஐந்து பேரையும் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி