உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இயல்பை விட மழை அதிகம் உரம், விதை இருப்பு திருப்தி

இயல்பை விட மழை அதிகம் உரம், விதை இருப்பு திருப்தி

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், இயல்பை விட, 70.12 மி.மீ.,மழை கூடுதலாக பெய்துள்ளது, சாகுபடிக்கு தேவையான விதை, உரங்கள் இருப்பு உள்ளது, என அதிகாரிகள் தெரிவித்தனர்.திருப்பூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு சராசரி மழை பொழிவு, 618.20 மி.மீ., ஆகும். ஆக.,மாதம் வரை, சராசரியான மழை பொழிவு, 257 மி.மீ., ஆகும். நடப்பாண்டு, நேற்று வரை, 327.12 மி.மீ., மழை பெய்துள்ளது.இயல்பை விட, 70.12 மி.மீ., மழை அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் மழை பொழிவு அதிகரித்துள்ள நிலையில், சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.பயிர் சாகுபடிக்கு தேவையான நெல் மற்றும் பிற பயிறு வகை தானியங்களின் விதைகள் தேவையான அளவு இருப்பு உள்ளது.நெல் விதை, 55.60 டன், சிறுதானிய பயிர் விதைகள், 16.23 டன், பயறு வகை விதைகள், 38.05 டன் மற்றும் எண்ணெய் வித்து பயிர் விதைகள், 23.43 டன் இருப்பு உள்ளது.பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா - 3,070 டன், டி.ஏ.பி., - 748 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் -- 6,010 டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் - 787 டன், வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளது, என, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை