உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாயன்மார்களுக்கு காட்சியளித்த பஞ்சமூர்த்திகள் :அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா 5ம் நாள் கோலாகலம்

நாயன்மார்களுக்கு காட்சியளித்த பஞ்சமூர்த்திகள் :அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா 5ம் நாள் கோலாகலம்

அவிநாசி;அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில் ஐந்தாம் நாளில் நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது.அவிநாசி கோவிலில், சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த, 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவாக கருதப்படும் ஐந்தாம் திருநாளான நேற்று இரவு பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.கோவில் ராஜகோபுரம் முன், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, 63 நாயன்மார்கள் தரிசிக்கும் காட்சியை கண்ட பக்தர்கள், 'ஓம் நமசிவாய' என கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் வணங்கினர். அதன்பின், கரூர் பசுபதீஸ்வரர் கோவில் சிவனடியார்கள் குழுவினர், திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டத்தினர் ஆகியோர் சிவகண பூத வாத்தியங்களை இசைக்க, நான்கு ரத வீதிகளிலும் சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெற்றது.விழாவில், அவிநாசி, திருப்பூர் வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டு குழு அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தேர்த்திருவிழாவில், இன்று மாலை திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா, நாளை (சனிக்கிழமை), பஞ்ச மூர்த்திகளும், கரிவரதராஜ பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவில், 21 மற்றும் 22ம் தேதி ஆகிய நாட்களில் அவிநாசியப்பர் தேர் (பெரிய தேர்), 23ம் தேதி அம்மன் தேர் (சிறிய தேர்), சுப்ரமண்யர், சண்டிகேஸ்வர், பெருமாள் தேர்களும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை